இயக்கலாமே செகண்ட் சிட்டிங் ரயில்கள் எதிர்பார்ப்பில் தென் மாவட்ட பயணிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
02:35

ஸ்ரீவில்லிபுத்துார் : தீபாவளிக்காக சென்னை மற்றும் கோயம்புத்துாரிலிருந்து செகண்ட் சிட்டிங் சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டுமென தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.



தமிழகத்தில் நாகர்கோவில், திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள், வேலைநிமித்தமாக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை நாட்களில் அதிகளவில் ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். சென்னையிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணிக்க வேண்டியநிலையில் பொதிகை, சிலம்பு, முத்துநகர், நெல்லை, திருசெந்துார், கன்னியாகுமரி, அனந்தபுரி மற்றும் தாம்பரம்-நாகர்கோயில், குருவாயூர் உட்பட 10 ரயில்கள் மூலம், 16 ஆயிரம் பேரே பயணிப்பதால் மற்றவர்கள் சொந்த ஊருக்கு வந்து செல்வதில் மிகுந்த சிரமபடுகின்றனர்.



இதேபோல் கோவையிலிருந்து நாகர்கோயிலுக்கு பகலில் ஒன்று, இரவில் ஒன்று இரண்டு ரயில்களே இயங்குவதால் அங்கிருந்தும் சொந்த ஊருக்கு வருபவர்கள் அதிகளவில் சிரமபடுகின்றனர். சென்னை, கோவையிலிருந்து அக்.25, 26ல் செங்கோட்டை, துாத்துக்குடி, திருசெந்துார், கன்னியாகுமரிக்கும், மறுமார்க்கத்தில் அக்.27, 28ல் புறப்பட்டு, சென்னை மற்றும் கோவைக்க செகண்ட் சிட்டிங் இருக்கை வசதி கொண்ட ரயில்களை இயக்கினால் பல ஆயிரம்பேர் பயனடைவர்.

இதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X