| வேளாண் இயந்திரம் மையம் அமைக்க மானியம் Dinamalar
வேளாண் இயந்திரம் மையம் அமைக்க மானியம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
02:45

திருவள்ளூர்: வட்டார அளவிலான, வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைப்பதற்கு, அரசு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சிறு மற்றும் குறு விவசாயிகள், அதிக விலையுள்ள வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்த இயலாது.இதை கருத்தில் கொண்டு, அவற்றை குறைந்த வாடகையில் பெற்று பயனடைய ஏதுவாக, வேளாண் பொறியி யல் துறை மூலம், வட்டார அளவில், வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.



திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பாண்டு, 19 மையம் அமைக்க, அரசு, 1.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துஉள்ளது. ரூபாய் 25 லட்சம் ஒரு மையம் அமைத்திட, 40 சதவீதம் மானியம் அடிப்படையில், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.இம்மையங்களை அமைத்திட, முன்னோடி விவசாயிகள், விவசாய சுயஉதவி குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் முன் வரலாம்.



விருப்பம் உள்ளோர், திருவள்ளுர் - 94439 57921, திருத்தணி - 97895 97447 மற்றும் பொன்னேரி - 98407 40699 ஆகிய இடங்களில் செயல்படும் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும், விபரங்களுக்கு, மாவட்ட செயற்பொறியாளரை, 94433 63967 தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X