செயின் பறிப்பு ஆசாமி சிக்கினார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
03:33

மடிப்பாக்கம்: புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தி, 45. இவர், சில நாட்களுக்கு முன், வீட்டருகே நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், சாந்தியிடம், 5 சவரன் செயினை பறித்து தப்பினார். மடிப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார், சம்பவ இடத்தில் உள்ள, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொசப்பேட்டையைச் சேர்ந்த அனிப் முகமது, 28, என்பவரை நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.



நகை திருடியவருக்கு, 'காப்பு!'



பட்டாபிராம்: ஆவடி அடுத்த பட்டாபிராம், அன்னம்பேடு, பெத்தேல் நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத், 57; ரயில்வே ஊழியர். செப்டம்பரில், இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 12 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் திருடு போனது. விசாரித்த பட்டாபிராம் போலீசார், நேற்று முன்தினம் இரவு, மாங்காடைச் சேர்ந்த விக்கி, 25, என்பவரை கைது செய்து, 12 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.




5 சவரன் செயின் மாயம்



வடபழனி: மாங்காடைச் சேர்ந்தவர், தாமரை, 54. இவர், நேற்று, வடபழனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல, அய்யப்பன்தாங்கலில் இருந்து, வடபழனிக்கு செல்லும், 26பி மாநகர பஸ்சில் பயணித்தார். வடபழனியில் சென்று இறங்கிய போது, இவரது கழுத்தில் இருந்த, 5 சவரன் செயின் மாயமாகி இருந்தது தெரியவந்தது. வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.




மொபைல் பறித்தோர் அகப்பட்டனர்



வண்ணாரப்பேட்டை: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 30; அயனாவரம் மண்டலத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று, தன் இருசக்கர வாகனத்தில், மூலக்கொத்தளம் வழியாக சென்றபோது, மர்ம நபர்கள் இருவர், அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போனை பறித்து தப்பினர். வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ், 20, நரேஷ், 29, ஆகிய இருவரையும் கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.




பெண்ணிடம் செயின் பறிப்பு



கொடுங்கையூர்: சென்னை, கொடுங்கையூர், திருவள்ளூவர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 35; பிராட்வேயில் மொத்த மிளகாய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, 30, நேற்று மாலை, தன் வீட்டருகே உள்ள மளிகை கடைக்கு நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில், 'ஹெல்மெட்' அணிந்து வந்த மர்ம நபர்கள், அவரது கழுத்தில் கிடந்த, 4 சவரன் செயினை பறித்து தப்பினர்.கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X