| வக்கீலை தாக்கிய பாதுகாவலர்கள் மீது வழக்கு Dinamalar
வக்கீலை தாக்கிய பாதுகாவலர்கள் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
03:38

தேனாம்பேட்டை : உயர் நீதிமன்ற வழக்கறிஞரை தாக்கிய நட்சத்திர ஓட்டல் பாதுகாவலர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



முகப்பேரைச் சேர்ந்தவர், விபுநந்தன், 26; உயர் நீதிமன்ற வழக்கறிஞர். நேற்று முன்தினம் இரவு, நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மது விருந்திற்கு சென்றார்.அப்போது, வாலிபர் ஒருவர் போன் பேச வேண்டும் என, விபுநந்தனிடம் மொபைல் போனை வாங்கினார்.பின், அந்த நபர் போனில் பேசியபடியே வெளியே சென்றார். பின் மொபைல் போனை வாங்கிய நபரை தேடி வெளியே வந்த விபுநந்தனை, மீண்டும் பாருக்குள் பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.



இதில் ஆத்திரமடைந்த பாதுகாவலர்கள் ஐந்து பேர், விபுநந்தனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.இது குறித்து விபுநந்தன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்
பொழுது போக்கு


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X