படித்த பள்ளியை தத்தெடுத்த பெண் இன்ஸ்பெக்டர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 அக்
2019
16:42
பதிவு செய்த நாள்
அக் 22,2019 03:46

வண்ணாரப்பேட்டை : தான் படித்த அரசு பள்ளியில், மாணவர்கள் வருகை குறைந்ததையடுத்து, பெண் இன்ஸ்பெக்டர், அப்பள்ளியை தத்தெடுத்து புனரமைத்து கொடுத்துள்ளார்.



வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், வடசென்னை நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. கடந்த, 1941ம் ஆண்டு துவங்கப்பட்ட பழமையான இந்த பள்ளியில், தற்போது, 60க்கும் குறைவான மாணவ - - மாணவியர் மட்டுமே படிக்கின்றனர். பழமை வாய்ந்த இப்பள்ளி, மிகவும் மோசமான நிலையில், மக்களுக்கு தெரியாத வகையில், பழுதடைந்து, பொலிவிழந்து காணப்பட்டது.



தற்போது, கிண்டியில் உள்ள சிலை திருட்டு தடுப்பு பிரிவில் பணிபுரிந்த ஆய்வாளர் காஞ்சனா, 47, இப்பள்ளியில், 1982ல், கல்வி பயின்ற மாணவி ஆவார்.அவர், தான் படித்த பள்ளியில், மாணவர் சேர்க்கை குறைந்து இருப்பதை அறிந்து, பொலிவிழுந்த பள்ளியை தத்தெடுத்தார். தன் சொந்த செலவில், 50 ஆயிரம் ரூபாயில், பாழடைந்த கட்டடத்திற்கு, வர்ணம் பூசி புதுப்பித்தார்.



பள்ளிக்கு சென்று, மாணவர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு,பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்.மேலும், இன்ஸ்பெக்டர் காஞ்சனா, தேசிய மற்றும் சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்று, 400க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றவர். ஆய்வாளர் காஞ்சனாவை பாராட்ட விரும்புவோர், 98401 19466 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chichu Damal - Panama,பனாமா
25-அக்-201916:11:51 IST Report Abuse
Chichu Damal தி நார்த் மெட்றாஸ் ஹிந்து girls ஸ்கூல் .. ஆனா பேரையும் மாத்திட்டாய்ங்க (வடசென்னை நடுநிலைப்பள்ளி) ...கண்டுக்காமையும் விட்டுட்டாய்ங்க.. இந்தம்மா செஞ்சது நல்ல காரியம் வாழ்க வளமுடன். எல்லாம் வல்ல ஈசன் அருள் புரியட்டும்.
Rate this:
Share this comment
Cancel
22-அக்-201908:45:21 IST Report Abuse
ருத்ரா கல்வி கற்க நிற்க அதற்கு தக. பள்ளியை தத்தெடுத்த (தாய்) பெண் வணக்கத்திற்குரியவர். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-அக்-201907:48:35 IST Report Abuse
Bhaskaran ஆயிரம் யாகங்கள் செய்வதைவிட எழுத்தறிவித்தலுக்கு உறுதுணைபுரியும் ஆய்வாளர் பாராட்டுக்குரியவர் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X