சாலைகளில் மழை நீர்; புகார் அளிக்கலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
03:50

சென்னை : சென்னையில், மழைக்கால பாதிப்புகள் மற்றும் சாலைகளில் மழை நீர் தேங்கினால், மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு, பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.



சென்னை மாநகராட்சி, 1,894 கி.மீ., நீளத்திற்கு, மழை நீர் வடிகால்களை பராமரித்து வருகிறது. இந்த வடிகால்கள், 35 கோடி ரூபாய் செலவில் துார் வாரப்பட்டுள்ளன. இந்த பணியில், 5,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மோட்டார் பம்புகள்மேலும், 22 சுரங்கப்பாதைகளில் மழைநீரை வெளியேற்ற, 60 உயரழுத்த பம்புகள், சாலைகளில் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற, 570 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் உள்ளன.



மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், மீட்பு பணிகளுக்காக, 109 இடங்களில், படகுகள், 176 நிவாரண மையங்கள், 52 இடங்களில் பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மழைக்கால தொற்று நோயை தடுக்க, 44 நடமாடும் மருத்துவ குழுக்கள், 50 இடங்களில், 'அம்மா' குடிநீர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், அவசரகால பணிகளுக்காக, 108 ஜே.சி.பி., மற்றும் பொக்லைன் இயந்திரங்கள், 126 லாரிகள் தயார் நிலையில் உள்ளன.



இந்நிலையில், பேருந்து சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கினால், உடனடியாக அகற்றும் வகையில், மாநகராட்சியில், வார்டுக்கு, நான்கு முதல், ஐந்து ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால், சாலைகளில் தேங்கும் நீரை, ஒப்பந்த ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.



முன்னெச்சரிக்கை




இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், மழை வெள்ளம் பாதிக்கப்படாத வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், மழை நீர் தேங்கிய நிலையில், தற்போது, 35க்கும் குறைவான இடங்களில், மழை நீர் தேங்கும் நிலை உள்ளது. இந்த இடங்களிலும், கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, உடனடியாக தேங்கும் நீர் அகற்றப்படுகிறது. மழை பாதிப்பு மற்றும் சாலையில் நீர் தேங்கினால், 044 25384520; 25384530; 25384540 என்ற மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
23-அக்-201900:11:04 IST Report Abuse
Raj தமிழக பாதாளச் சாக்கடை கால்வாய் திட்டம் 100% வெற்றி. தெர்மோ கோள் திட்டம் போல். பண மலை திட்டங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X