தார்ச்சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
05:40

இடைப்பாடி: இடைப்பாடி கவுண்டம்பட்டி செட்டிகாடு, ஏரிக்காடு பகுதிகளுக்கு தார்ச்சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.


இடைப்பாடி, 24, 26வது வார்டுகளில் உள்ளது செட்டிகாடு, ஏரிக்காடு, செங்காட்டுகாடு ஆகிய பகுதிகள். இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிகளுக்கு செல்ல சக்திநகர் பகுதியில் இருந்து, இட்டேரி சாலை உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் இச்சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், அவ்வழியே நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குண்டும், குழியுமாக இருப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுகின்றனர். புதியதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று பள்ளி செல்லும் குழந்தைகளுடன் மண் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அரைமணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டும், எந்த அதிகாரியும் வராததால் மக்களே கலைந்து சென்றனர்.


இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்ற கோரி, பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கையும் இல்லை. சாலை அமைக்காததால், ஒரு கி.மீ., செல்லும் தூரத்தை மலங்காடு, வீரப்பம்பாளையம், வெள்ளாண்டிவலசு ஆகிய பகுதிகளின் வழியாக, ஏழு கி.மீ., சுற்றி செல்லும் அவலநிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X