| இலகுரக வாகன போக்குவரத்துக்கே சிதைந்துபோன நகராட்சி தார்ச்சாலை Dinamalar
இலகுரக வாகன போக்குவரத்துக்கே சிதைந்துபோன நகராட்சி தார்ச்சாலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
05:41

ஆத்தூர்: இலகுரக வாகனங்களின் போக்குவரத்துக்கே தாக்கு பிடிக்காமல், நகராட்சி தார்ச்சாலை சிதைந்து போனதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.


ஆத்தூர், முதலாவது வார்டு, கோட்டை - தென்னங்குடிபாளையம் வரை, 1.100 கி.மீ., தூரம், 2012- 13ல், உள்கட்டமைப்பு திட்டத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை போடப்பட்டது. கனரக வாகன போக்குவரத்து இல்லாத நிலையில், அச்சாலை ஆங்காங்கே சேதமடைந்து வருகிறது. 300 மீட்டர் தூரத்துக்கு மேல், பல இடங்களில் சாலை அதிகளவில் சீரழிந்துள்ளது. கனமழை பெய்தால், மீதமுள்ள சாலையும் மாயமாகும் நிலை உள்ளது. சிறு மழை பெய்தாலும், பள்ளத்தில் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. தொடர்ந்து தேங்கும் நீரால், சாலை மேலும் சிதைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டது.


இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: சாலை பள்ளத்தை அடைக்க, கட்டட கான்கிரீட் கழிவை கொட்டுகின்றனர். மழை பெய்ததும், மீண்டும் பள்ளமாகி, தண்ணீர் தேங்குகிறது. சாலை இருபுறமும் மேடாக இருப்பதால், தேங்கும் நீர் வெளியேற வழியில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். ஆத்தூர் நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'ஆத்தூர், கோட்டை அகழி கரை வழியாக செல்லும் சாலை வரை, களிமண் என்பதால் சிதைந்துள்ளது. இங்குள்ள, தனியார் காஸ் குடோனுக்கு செல்லும் லாரிகளால், சாலை சேதமடைந்துள்ளது. சீரமைக்க நிதி கேட்டு, அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது' என்றனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X