ஆஞ்சநேயர் சிலை திருட்டால் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
06:24

தஞ்சாவூர்: குடந்தை அருகே, கோவில் சன்னிதியில் இருந்த ஆஞ்சநேயர் சிலையை, காரில் வந்த, ஐந்து பேர் கும்பல் திருடிச் சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர், கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தில், தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள துர்க்கையம்மன், பிரசித்தி பெற்றது.மூலவரின் வலதுபுறத்தில் உள்ள சுவாமி சன்னிதி கோஷ்டத்தில், 1 அடி உயரமுள்ள, 1,000 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சிலை பதிக்கப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்துள்ளது. இரவு, 8:00 மணிக்கு, கோவில் குருக்கள் கணேஷன், சன்னிதியை சுற்றி வந்த போது, கோஷ்டத்தில் இருந்த ஆஞ்சநேயர் சிலை மாயமாகி இருப்பதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தார். கோவில் அதிகாரிகள், அங்குள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இரவு, 7:00 மணிக்கு ஒரு இண்டிகா காரில் வந்த, ஐந்து பேர் கும்பல், மூலவர் சன்னிதி அருகே வந்து, வெகு நேரமாக பயபக்தியுடன் சுவாமி கும்பிட்டனர்.பின், ஐந்து பேரில், மூவர், சுவரை மறைத்து நிற்க, இருவர், ஆஞ்சநேயர் சிலையை கைகளால் ஆட்டி பெயர்த்து எடுத்து, கட்டை பைக்குள் வைத்து, வெளியே எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.இந்த கொள்ளை, 30 நிமிடங்களில் நடந்துள்ளது. பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிலை கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


 

Advertisement
மேலும் தஞ்சாவூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X