கரூர்: கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை வெங்கமேடு பிரிவு பஸ் நிறுத்தத்தில், நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்லும் இப்பகுதி மக்கள், கரூர் செல்ல, இந்த பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நிழற்கூடம் முன், சிலர் மண்ணை கொட்டிவைத்துள்ளனர். இதனால், நிழற் கூடத்தில் நிற்க முடியாமல், பயணிகள், திறந்தவெளியில் கொளுத்தும் வெயிலில் நின்று காத்திருக்க வேண்டி உள்ளது. நிழற்கூடம் முன் கொட்டப்பட்டுள்ள மண்ணை அள்ளி அப்புறப்படுத்த வேண்டும்.