கரூர்: கரூர் ஜவஹர் பஜாரில் தாலுகா அலுவலகம், தீயணைப்பு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளது. மேலும், அப்பகுதியில் ஜவுளிக் கடைகள், வர்த்தக நிறுவனங்களும் அதிகமாக உள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பஜாருக்கு பொதுமக்கள் அதிகளவில் செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், காலை நேரத்தில், சரக்கு லாரிகள் பஜார் பகுதியில் செல்வதால், மற்ற வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன. ஜவஹர் பஜாரில் சரக்கு லாரிகள் பகல் நேரத்தில் செல்ல தடை விதிக்க வேண்டும்.