| ஜவஹர் பஜாரில் பகலில் செல்லும் லாரிகளால் தொல்லை Dinamalar
ஜவஹர் பஜாரில் பகலில் செல்லும் லாரிகளால் தொல்லை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
08:57

கரூர்: கரூர் ஜவஹர் பஜாரில் தாலுகா அலுவலகம், தீயணைப்பு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளது. மேலும், அப்பகுதியில் ஜவுளிக் கடைகள், வர்த்தக நிறுவனங்களும் அதிகமாக உள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பஜாருக்கு பொதுமக்கள் அதிகளவில் செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், காலை நேரத்தில், சரக்கு லாரிகள் பஜார் பகுதியில் செல்வதால், மற்ற வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன. ஜவஹர் பஜாரில் சரக்கு லாரிகள் பகல் நேரத்தில் செல்ல தடை விதிக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X