| பஸ் நிலையத்தில் மண்சரிவு : மினி பஸ் கண்ணாடி சேதம் Dinamalar
பஸ் நிலையத்தில் மண்சரிவு : மினி பஸ் கண்ணாடி சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
22:28

கோத்தகிரி:கோத்தகிரி பஸ் நிலையத்தில் ஏற்பட்ட மண்சரிவால், நின்று கொண்டிருந்த மினி பஸ் கண்ணாடி உடைந்தது.நீலகிரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கோத்தகிரி பகுதியிலும், மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில், மண்சரிவு ஏற்பட்டது. இதில், 30 அடி உயரத்தில் இருந்து, மண் சரிந்து விழுந்து, பஸ்நிலைய கான்கிரீட் கூரையில் விழுந்தது. சிறிய பாறைகள் உருண்டு தரையில் விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் பின்பக்க கண்ணாடி உடைந்தது.அதிகாலை நேரத்தில் மண்சரிவு ஏற்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல, கோத்தகிரி - சோலுார்மட்டம், கூக்கல்தொரை மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில், ஆங்காங்கே லேசான மண் சரிவு ஏற்பட்டது. போக்குவரத்துக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X