தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறல்: மேம்பால கட்டுமான பகுதியில் குழப்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
22:55

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில், ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிக்காக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. ஆனாலும், தடை செய்யப்பட்ட பகுதியில் பிரவேசிக்கும் வாகனங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டில் வடுகபாளையம் பிரிவு அருகே போத்தனுார் ரயில் பாதை குறுக்கிடுகிறது. ரயில் பாதையை கடக்க, 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கும் பணி சமீபத்தில் துவங்கப்பட்டது.கட்டுமான பணிகளுக்காக, ரயில்வே கேட்டின் இரு புறமும் தடைகள் வைத்து, போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. கான்கிரீட் துாண்களுக்கு அஸ்திவார பணிகள் நடக்கும் பகுதியில், விபத்து மற்றும் இடையூறுகளை தவிர்க்க, வாகனப் போக்குவரத்தை தடுக்கும் வகையில் மண் மேடுகள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனாலும், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மாற்றுப்பாதையில் செல்லாமல், தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி பிரவேசித்து பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.மண் கொட்டப்பட்டு, மழைக்கு சேறாக மாறியுள்ள இடத்தில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இது, போலீசாருக்கும், நெடுஞ்சாலை துறையினருக்கும் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.பணி நடக்கும் பகுதியை, கடந்து செல்ல பல்வேறு மாற்று வழித்தடங்கள் உள்ள நிலையில், அவற்றை பயன்படுத்தி பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.பொதுமக்கள் தரப்பில், ரோட்டின் ஓரத்தில் மண்ணாக உள்ள பகுதியில் மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுப்புகின்றனர்.வரும் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டுமான பணிகள் தொடர உள்ளன. அது வரை மாற்று வழித்தடங்களை பயன்படுத்த பொதுமக்கள் பழகிக் கொள்வது அசம்பாவிதங்களை தவிர்க்க வழிவகுக்கும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X