| வங்கி ஊழியர் போராட்டம் பணப்பரிவர்த்தனை பாதிப்பு Dinamalar
வங்கி ஊழியர் போராட்டம் பணப்பரிவர்த்தனை பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
22:55

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், பல கோடி ரூபாய் வங்கி பரிவர்த்தனைகள் முடங்கி, வர்த்தகம் பாதிக்கப்பட்டது.வங்கி ஊழியர்கள், வங்கிகள் இணைப்பால் ஏற்படும் பாதிப்புகளை கண்டித்தும், வங்கித்துறையை பலப்படுத்த வாராக்கடனை வசூலிக்க வலியுறுத்தியும், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்வதை கண்டித்தும் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சியில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள், நியூ ஸ்கீம் ரோடு இந்தியன் வங்கி கிளை முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொள்ளாச்சியிலுள்ள பெரும்பாலான தேசியமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிக் கிளைகள் நேற்று செயல்படவில்லை. பல கோடி ரூபாய் வங்கி பண பரிவர்த்தனைகள் முடங்கி, வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X