கலப்பட டீத்தூள் 300 கிலோ பறிமுதல்: தீபாவளி இனிப்பு தயாரிப்பும் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
22:57

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், டீத்துாள் கலப்படம் மற்றும் தீபாவளி ஸ்வீட்ஸ் தயாரிப்பு குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.பொள்ளாச்சியில் கலப்பட டீத்துாள் 'பேக்கிங்' செய்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், செல்வபாண்டி ஆகியோர் தொழிற்பேட்டையில் ஆய்வு செய்தனர்.அப்போது, பொள்ளாச்சியை சேர்ந்த கணேஷ், 63, அனுமதி பெற்று, 'காட்சன்', 'அஸ்ஸாம் கோல்டு' என்ற பெயர்களில் டீத்துாள் பேக்கிங் செய்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.டீத்துாள் பேக்கிங் கவரில், உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல், லைசென்ஸ் நம்பர், பேக்கிங் தேதி உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடப்படாமல் இருந்தது தெரிய வந்தது.இதனால், டீத்துாள் கலப்படம் இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், டீத்துாள் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 300 கிலோ டீத்துாளை பறிமுதல் செய்து, குடோனுக்கு 'சீல்' வைத்தனர்.இனிப்பு தயாரிப்பு ஆய்வுதீபாவளி பண்டிகையையொட்டி திருமண மண்டபங்களில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள், கடைகளில் விற்பனை செய்யப்படும் பலகாரங்களை மாவட்ட நியமன அலுவலர் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது, உணவு பொருட்களில் கலர் அதிகம் கலக்க கூடாது. தரைவிரிப்பாக அச்சிடப்பட்ட பேப்பர் பயன்படுத்த கூடாது. பயன்படுத்திய ஆயிலை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. கை மற்றும் தலைக்கு உரை அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.பொள்ளாச்சியில், 10 கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள், 'நான்கு கடைகளுக்கு, தரைவிரிப்பாக நாளிதழ் பயன்படுத்திய கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். மேலும், அளவுக்கு அதிகமாக கலர் கலந்த, 20 கிலோ இனிப்பை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X