ஊட்டி:நீலகிரியில், கனமழை காரணமாக, மிகவும் அபாயகரமாக கருதப்படும், 70 பகுதிகளின் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது; 42 சிறப்பு குழுக்கள் அமைத்து, இப்பகுதிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில், 406 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சம், தேவாலா, 59, நடுவட்டம், 56, கூடலுார், 48 மி.மீ., பதிவானது. மாவட்டத்தில் பெரிய அணையான அப்பர்பவானி, முழு கொள்ளளவை எட்டியதால், வினாடிக்கு, 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், அத்திக்கடவு, பில்லுார் போன்ற பகுதிகளில், கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தவிர, குந்தா, கெத்தை, அவலாஞ்சி அணை பகுதிகளிலும், அவ்வப்போது உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர் செல்லும் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் பயிரிட்டுள்ள காய்கறிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழையில், 20 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவை, நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்தனர்.கலெக்டர் நேரடி ஆய்வுகலெக்டர் இன்னசென்ட் திவ்யா, நேற்று, மஞ்சூர் குந்தா பாலம், மேட்டுசேரி, மெரிலேண்ட் சாலை, குன்னுார் காட்டேரி, காந்திபுரம், கெந்தளா உட்பட மண்சரிவு ஏற்பட்ட இடங்களையும், அவசர கால முகாம்களையும் பார்வையிட்டார். இவருடன், நெடுஞ்சாலை, தீயணைப்பு, வருவாய் துறை அதிகாரிகள் சென்றனர்.மாவட்டத்தில், சமீபத்தில் நடத்தப்பட்ட புவியியல் துறையினரின் ஆய்வில், 283 பேரிடர் பகுதிகள் கண்டறியப்பட்டு, அதில், மிகவும் அபாயகரமான பகுதிகளாக, 70 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன; பட்டியல், மாநில அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.24 மணிநேரம் கண்காணிப்புகலெக்டர் கூறுகையில், ''மாவட்டத்தின் அனைத்து அபாய பகுதிகளிலும், 24 மணிநேர, கண்காணிப்பு நடவடிக்கை தொடர்கிறது. இதற்கு, 42 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குந்தா, குன்னுார் பகுதிகளில், பேரிடர் பயிற்சி பெற்ற மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். தற்போது, மாவட்டத்தில், எவ்வித பாதிப்புகளும் இல்லை. சேதமான வீடுகளுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.மிகவும் அபாய பகுதிகளின் விபரம்ஊட்டி தாலுகா:முத்தோரை, எல்க்ஹில், நொண்டி மேடு, தலையாட்டு மந்து, வேலிவியூ, புதுமந்து, ராயல்கேஸ்டில், காந்தி நகர், அம்பேத்கர் நகர், பாக்கியா நகர், கக்குச்சி காந்திநகர், குடிமனை, சிவசக்தி நகர், முக்கிமலை, எமரால்டு, தேவர்பெட்டா, பரமூலா, சேரன் நகர், கெத்தை.குன்னுார் தாலுகா:குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலை, குன்னூர் நகரம், நஞ்சப்பா சத்திரம், அம்மன் நகர், ரயில்வே நிலைய மேல்பகுதி பாரதிநகர், மேல் மந்தாடா, மித்தல்போர்டு, மணியாபுரம், ஆலாடா வேலி, அதிகரட்டி - குன்னுார் சாலை, அருவங்காடு, ஆலட்டணை, தைமலை, முசாபுரி, சோல்ராக், காவில்கம்பை, பெரியார் நகர் கரிமொரஹட்டி, சின்ன கரும்பாலம்.கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகா:மூலைகாடு, பெரியசூண்டி, கூவசோலை, மேல் கூடலுார்.கோத்தகிரி தாலுகா:கொணவக்கரை, ஓம்நகர், சம்பரவூ, நட்டக்கல், பங்கள படிகை, குமரமுடி, பொம்மன், கோத்திமுக்கு, கொப்பையூர், குள்ளங்கரை, கட்டபெட்டு பாரதிநகர், ஜெகதளா, கட்டபெட்டு, தவிட்டு மேடு, கம்பிசோலை, கன்னிகா தேவி காலனி, தொகலட்டி -ஒன்னோரை சாலை, சக்தி நகர், கல்லுார், அரியூர் மட்டம், வெள்ளரிகம்பை, கீரைக்கல், பாரதிநகர், இந்திரா நகர், குனியட்டி, நாரகிரி, குட்டிமணி நகர்.