கால்களை கவனமா பாத்துக்கோங்க...! 'ராயல் கேர்' மருத்துவர் அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
23:29

''வெறுங்காலுடன் நடைபயிற்சி, காலணிகளை முறையாக பயன்படுத்தாதது போன்ற காரணங்களால், கால்களில் புண்கள் ஏற்படும்,'' என்கிறார், 'ராயல்கேர்' பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை, நகர் மைய சர்க்கரை நோய் நிபுணர் தேவி காயத்ரி.இதுகுறித்து அவர் கூறியதாவது:ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால், நரம்புகள், சிறுநீரகம், கண் நரம்பு, ரத்த நாளங்கள் பாதிக்கப்படும்.


சர்க்கரை நோயாளிகளில், 16 சதவீதம் பேர், கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரையால், கால் பாதங்களில் புண் ஏற்பட்டு, கால் விரல்கள் அல்லது கால் அகற்றப்படும் நிலைக்குள்ளாகின்றனர்.வெறுங்காலுடன் நடைபயிற்சி, காலணிகளை முறையாக பயன்படுத்தாதது, முறையற்ற, பொருந்தாத காலணிகளை பயன்படுத்துவதால், தடித்தோல் நோய், கால் ஆணி ஆகியவற்றால், கால்களில் புண்கள் ஏற்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு, தோலில் எண்ணெய் மற்றும் வியர்வை உற்பத்தி குறைந்து, கால் தோலில் வறட்சி ஏற்படுகிறது.


கட்டுப்பாடில்லாத சர்க்கரையால், நரம்புகளில் சேதம் ஏற்பட்டு, கால் நரம்புகளில்உணர்ச்சி இல்லாமை, நரம்பு வலுகுறைதல், நரம்பு கூட்டு குறைபாடுகள் ஏற்படும். அதிகளவு சர்க்கரையால், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பால், கால் நரம்புகளுக்கு செல்லும் ரத்தம் தடைபடுகிறது.


நாள்பட்ட சர்க்கரை, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். இதனால் அடிக்கடி நோய் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.தடுக்கும் முறைகள்சரியான மருத்துவம், உணவு முறை, நடைபயிற்சி மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.கால்களை தினமும் பரிசோதித்து, சுத்தமாகவும், எண்ணெய் பசையுடன் வைக்கவும்.


சரியான அளவு காலணிகள், காட்டன் காலுறைகள் அணிதல், கால் பரிசோதனை, கால் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களின் செயல்திறன் கண்டறிதல் மூலம் கால்புண்களை தவிர்க்கலாம்.மருத்துவ பரிசோதனை, உரிய நேர மருத்துவ அணுகுமுறையின் மூலம், குறைபாடுகளை தவிர்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.விபரங்களுக்கு: டாக்டர். தேவி காயத்ரி, சர்க்கரை நோய் நிபுணர், 'ராயல் கேர்' சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நகர் மையம், காந்திபுரம், கோவை. 0422- - 4001000.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X