கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை இலக்கு... குறைப்பு! 12 ஆண்டுகளுக்கு பின் நிர்வாகம் முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
23:29

திருவாலங்காடு : திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 12 ஆண்டுகளுக்கு பின், நடப்பாண்டிற்கான கரும்பு அரவை இலக்கு குறைக்கப்பட்டுள்ளது. போதிய பருவ மழை இல்லாததால், விவசாயிகள் பயிரிட்ட கரும்பு கருகியது, பயிரிடும் அளவும் குறைந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என, ஆலை நிர்வாகம் சமாளித்து வருகிறது.



திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காட்டில் இயங்குகிறது.இந்த ஆலைக்கு, திருத்தணி, திருவாலங்காடு, அத்திமாஞ்சேரிபேட்டை, பேரம்பாக்கம், ஆர்.கே.பேட்டை, சாலை மற்றும் அரக்கோணம் கோட்ட அலுவலகங்களில் இருந்து, விவசாயிகள் கரும்புகளை அனுப்பி வைக்கின்றனர்.



5,500 ஏக்கர் பயிர்




ஒவ்வொரு ஆண்டும், குறைந்தபட்சம், 3,000 கரும்பு விவசாயிகள், 7,000 - 9,000 ஏக்கர் பரப்பில் கரும்பு பயிரிட்டு, கரும்புகளை பதிவு செய்து, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, அரவைக்காக அனுப்பி வைப்பர்.ஆலை நிர்வாகம், பயிரிட்ட கரும்பு தோட்டத்தை கணக்கிட்டு, அரவை இலக்கு நிர்ணயம் செய்து, அக்டோபர் மாதத்தில் கரும்பு அரவை துவங்கப்படும்.ஆனால், 2007 முதல், 2019ம் ஆண்டு வரை, இதுவரை ஆலை நிர்ணயித்த கரும்பு அரவை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், 2019- - 20ம் ஆண்டில், மேற்கண்ட கோட்டங்களைச் சேர்ந்த, 1,950 விவசாயிகள், 5,500 ஏக்கர் பரப்பில் கரும்பு பயிரிட்டுள்ளனர். போதிய மழை இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் கரும்பு பயிரிடவில்லை. இதனால், ஆலை நிர்வாகம், கடந்த வாரம் நடந்த நிர்வாக குழு கூட்டத்தில், நடப்பாண்டில், 1.34 லட்சம் டன் கரும்பு மட்டுமே உள்ளதால், 1.50 லட்சம் டன் கரும்பு அரவை என, இலக்கு நிர்ணயித்து, நவ., 1ம் தேதி, அரவை துவக்க திட்டமிட்டது.



இலக்கு எட்டுமா?




இதற்காக, ஆலையில் தீ மூட்டும் நிகழ்ச்சியை, ஆலை நிர்வாக மேலாண் இயக்குனர் சித்ரா, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பொன்னுரங்கம், இயக்குனர் சத்தியா ஆகியோர் துவக்கி வைத்தனர்.கடந்த, 12 ஆண்டு களுக்கு பின், நடப்பாண்டில் தான் கரும்பு அரவையின் இலக்கு, 1.50 லட்சம் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது.கடந்த, 2007 - 2019ம் ஆண்டு, மார்ச் மாதம் வரை, மிக குறைந்தபட்சமாக, 1.85 லட்சம் டன் கரும்பு அரவை இலக்கு நிர்ணயித்து, அரவை செய்யப்பட்டது. ஆனால், இன்று வரை நிர்ணயித்த இலக்கை, ஆலை நிர்வாகம் இதுவரை எட்டியதில்லை. நடப்பாண்டிலாவது, நிர்ணயித்த இலக்கை எட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



பணம் ஒதுக்கீடு




இது குறித்து, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக மேலாண் இயக்குனர் ஆர்.சித்ரா கூறியதாவது:கடந்தாண்டில் பருவ மழை இல்லாததால், விவசாயிகளால் சரியாக கரும்பு பயிரிட முடியவில்லை. மேலும், கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் பயிரிட்ட கரும்பு பயிர், தண்ணீர் இல்லாமல் கருகியது.தற்போது, மொத்தம், 1.34 லட்சம் டன் கரும்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனால், ஒரு மாதம் கழித்து, நவம்பரில் கரும்பு அரவை துவக்கி உள்ளோம். மேலும், கரும்பு அரவை இலக்கு, 1.50 லட்சம் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது.



கடந்தாண்டு கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, ஓரிரு நாளில் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்; அரசும், பணம் ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.



ஆலையின் மீது நம்பிக்கை இல்லை




விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு நிலுவை தொகையை, பல மாதங்களாக வழங்காமல், ஒவ்வொரு ஆண்டும், விவசாயிகளை கடனாளிகளாக மாற்றுகிறது. இதனால், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இல்லை. இதன் காரணமாகவே, 'பில்' தொகை உடனே வழங்கும் தனியாருக்கு, விவசாயிகள் கரும்பு ஓட்டுகின்றனர்.-



-ஒய்.வேணுகோபால், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர்

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X