ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பேரையூரை சேர்ந்தவர் அழகு 70. இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் குடும்ப பிரச்னையால் குடும்பத்தினரை பிரிந்து ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வசித்தார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் நேற்று அழகு இறந்தார். உறவினர்கள் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் உதவியுடன் அடக்கம் செய்தனர். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.