முதியவருக்கு 'பேஸ்மேக்கர்' கருவி: அரசு மருத்துவமனையில் வெற்றிகரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
23:32

கோவை:இருதய துடிப்பு குறைந்ததால், அவதிப்பட்டு வந்த முதியவருக்கு, 'பேஸ்மேக்கர்' கருவியை, கோவை அரசு மருத்துவமனை இருதய துறை டாக்டர்கள் வெற்றிகரமாக பொருத்தினர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் குப்பண்ணன், 68. இவர், வீட்டில் இருந்த போது மயங்கி விழுந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனை அழைத்து வரப்பட்டார்.இருதய நோய் சிகிச்சை துறையில் பரிசோதித்த டாக்டர்கள், அவரது இருதய துடிப்பு குறைவாக இருந்ததை கண்டறிந்து, 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்த திட்டமிட்டனர். துறை தலைவர் நம்பிராஜன், உதவி பேராசிரியர் சக்கரவர்த்தி தலைமையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.மருத்துவமனை 'டீன்' அசோகன் கூறியதாவது:வயதாகும் போது, இருதய துடிப்பு குறைந்து, மயக்கம் வந்து விழும் நிலை ஏற்படும். இதற்கு பேஸ்மேக்கர் பொருத்துவது மட்டுமே தீர்வு. சாதாரணமாக மனிதனுக்கு, இருதய துடிப்பு நிமிடத்துக்கு, 72 என இருக்கும். குப்பண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு, நிமிடத்துக்கு, 30 துடிப்புகள் மட்டுமே இருந்தன.இருதய துறை மருத்துவர்கள், இரண்டு மணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சை மூலம், இவருக்கு, பேஸ்மேக்கர் கருவி பொருத்தினர். கருவி பொருத்தப்பட்ட பின், நோயாளி சாதாரண வாழ்க்கை வாழலாம். தனியார் மருத்துவமனைகளில், இதற்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவு பிடிக்கும். காப்பீட்டு திட்டத்தின் மூலம், அரசு மருத்துவமனையில், இது இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X