சாயல்குடி : குழந்தை நட்பு ரீதியான பொறுப்புடைமை திட்டம், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமை மீதான உடன்படிக்கை ஏற்பட்டு 30வது ஆண்டை கொண்டாடுதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
பேடு மற்றும் சி.சி.எப்.சி., தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் திட்ட இயக்குனர் மன்னர் மன்னன் தலைமை வகித்தார்.பள்ளி தலைமையாசிரியர் மேரி முன்னிலை வகித்தார். 35 கிராமங்களில் இருந்து வந்திருந்த பள்ளி மாணவர்கள்,வளர் இளம்பெண்கள் பங்கேற்றனர். பயிற்சிகளை ஆனந்த் விளக்கினார்.தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேன்மொழி, சைல்டு லைன் ஆனந்தராஜ், வழக்கறிஞர் சிவராம கிருஷ்ணன், வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் ஜார்ஜ், காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். களப்பணியாளர் முகிலாராஜ் நன்றி கூறினார்.