அரசு மருத்துவர்கள் 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
23:39

சிதம்பரம்:வரும் 25ம் தேதி முதல் நடக்கும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கலந்து கொள்கின்றனர்.


இது குறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் முத்துக்குமரன் கூறியிருப்பது; தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் கால முறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் கலந்தாய்வு மூலம் பணி அமர்த்தப்பட வேண்டும்.அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு (எப்.ஓ.ஜி.டி.ஏ) தொடர் போராட்டங்கள் நடத்தியது.


அரசு மருத்துவர்கள் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.வரும் (அக்டோபர்) 25ம் தேதி முதல், மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகள், 70 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது, பொதுமக்கள் நலன் கருதி, உயிர் காக்கும் அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மருத்துவம் மற்றும் காய்ச்சல் சிகிச்சை பிரிவுகள் மட்டும் செயல்படும். இவற்றில் தாலா ஒரு டாக்டர் வீதம் பணியில் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X