செய்தி சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
23:43

25ல் வேலை வாய்ப்பு முகாம்



திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட,வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 25ம் தேதி, காலை, 10:00 மணியளவில், வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாமில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம்.தனியார் வேலைவாய்ப்பு முகாமில், பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, ரத்து செய்யப்பட மாட்டாது என, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.




சுற்றுலா தின விழிப்புணர்வு



திருவள்ளூர்: திருவள்ளூர், டி.ஆர்.பி.சி.சி.சி.இந்து மேல்நிலைப் பள்ளியில் நடந்த உலக சுற்றுலா தின விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜெயகுமார் தலைமை வகித்தார்.பின், திட்ட இயக்குனர் பேசுகையில், 'பள்ளி மாணவர்கள், தங்கள் ஊர்களின் அருகில் உள்ள சுற்றுலா தலங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் மகத்துவத்தை உணர்த்தும் வகையில், தங்களை தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.உலக சுற்றுலா தினம் குறித்து நடைபெற்றபேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகளை, திட்ட இயக்குனர் வழங்கினார்.




அம்மனுக்கு பாலாபிஷேகம்



திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமையையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.மாலை, 3:00 மணிக்கு ராகுகால பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் பங்கேற்று, கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் அம்மன் உட்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.




ஊராட்சியில் மருத்துவ முகாம்



திருத்தணி: திருத்தணி அடுத்த, தும்பிக்குளம் கிராமத்தில், பூனிமாங்காடு வட்டார மருத்துவ அலுவலர் பிரசன்னா தலைமையில், 30க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கிராமத்திற்கு நேரில் சென்று, துாய்மை பணிகள் மேற்கொண்டனர்.மேலும், நடமாடும் மருத்துவ குழுவினர் தங்கியிருந்து சிகிச்சை அளித்தும் காய்ச்சல் வந்தவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்தும் வருகின்றனர்.




நாளை மின் குறைதீர் கூட்டம்



ஒலிமுகமதுபேட்டை: காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர், திருத்தணி ஆகிய கோட்டங்கள் செயல்படுகின்றன. இதில், காஞ்சிபுரம் தெற்கு மின் கோட்டத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை நடைபெற உள்ளது.ஒலிமுகமதுபேட்டை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்களின் குறை, நிறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் பதிவு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.




காயலான் கடைக்கு அபராதம்



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை ரத்னம் நகரில், நகர் நல அலுவலர் முத்து மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், நேற்று ஆய்வு நடத்தினர்.அப்பகுதி காயலான் கடையில் கிடந்த பழைய பொருட்களில், தேங்கியிருந்த தண்ணீரில் கொசுப்புழு இருப்பதை, அதிகாரிகள் பார்த்தனர்.இதையடுத்து, அதன் உரிமையாளர் பலராமன் என்பவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.




பயணியருக்கு கஷாயம்



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், நகராட்சி ஆணையர் பொறுப்பு மகேந்திரன், நேற்று, அங்கிருந்த பயணியருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார். இதேபோல், பொதுமக்கள் கூடும் இடங்களில், நிலவேம்பு கஷாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




கழிப்பறை கட்டடம் ஒப்படைப்பு



தென்னேரி: வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, தனியார் நிதி நிறுவனம், 1.70 லட்சம் ரூபாயில், இரு கழிப்பறைகள் மற்றும் மூன்று சிறுநீர் கழிக்கும் கட்டமைப்புடன் கூடிய கட்டடத்தை கட்டிக் கொடுத்துள்ளது.இந்த கட்டடத்தை, மாணவர்கள் பயன்பாட்டிற்கு, நேற்று திறந்த தனியார் நிறுவனத்தினர், தலைமை ஆசிரியர் மோகனசுந்தரத்திடம், அதன் சாவியை ஒப்படைத்தனர்.




மருத்துவ சங்க பிரிவு துவக்கம்



காஞ்சிபுரம்: இந்திய பல் மருத்துவ சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட கிளை சார்பில், பெண் பல் மருத்துவர்களுக்கான பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதன் துவக்க விழா காஞ்சிபுரத்தில் நடந்தது.காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துணை இணை இயக்குனர் டாக்டர் ஜீவா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விழாவை துவக்கி வைத்தார்.இதில், பெண்களுக்கான சிறப்பு யோகாசன பயிற்சி, பட்டிமன்றம், ஆடல், பாடல் என, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்டம் முழுவதிலும் இருந்து, 70 பல் மருத்துவர்கள், குடும்படுத்துடன் பங்கேற்றனர்.




40 பேர் மனு அளிப்பு


உத்திரமேரூர்: உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மனு நீதிநாள் முகாம், காஞ்சிபுரம் சப் - கலெக்டர் சரவணன்தலைமையில் நடந்தது. இதில், மருத்துவ காப்பீடு, வங்கி கடன், மூன்று சக்கர வாகனம், காது கேட்கும் கருவி, முதியோர் உதவித்தொகை என, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி கேட்டு, 40 மனுக்கள் பெறப்பட்டது.செங்கல்பட்டு மாற்றுத்திறனாளி அலுவலர், உத்திரமேரூர் தனி தாசில்தார், மண்டல துணை தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X