| குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை Dinamalar
குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
00:10

காரைக்கால்:தீபாவளி பண்டிகைக்கு போதிய பணம் இல்லாததால் வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருநள்ளார் வி.எஸ்.நகரை சேர்ந்தவர் கார்த்திக் மகன் சதீஷ்குமார், 33; பெயிண்டர். இவரிடம், இவரது மனைவி சத்தியபிரியா நேற்று முன்தினம் தீபாவளி செலவிற்கு பணம் கேட்டார். அதற்கு சதீஷ்குமார், பணம் இல்லை என்றார். ஆனால், அன்று மாலை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.அப்போது சத்தியபிரியா, குடும்ப செலவிற்கு பணம் இல்லை. ஆனால், குடிக்க மட்டும் பணம் எப்படி வந்தது என கேட்டார். அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அன்று இரவு, வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X