விதியை பலாத்காரத்துடன் தொடர்புபடுத்தி கருத்து: எம்.பி., மனைவிக்கு கண்டனம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 அக்
2019
16:50
பதிவு செய்த நாள்
அக் 23,2019 00:10

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த காங்கிரஸ், எம்.பி.,யின் மனைவி, விதியை பாலியல் பலாத்காரத்துடன் தொடர்புபடுத்தி, 'பேஸ்புக்'கில் எழுதிய பதிவு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.








கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள, எர்ணாகுளம் லோக்சபா தொகுதியை சேர்ந்த காங்., - எம்.பி., ஹிபி ஈடன். இவரது மனைவி, அனா லிண்டா ஈடன்.





கேரளாவில், சமீபத்தில் பெய்த கனமழையில், எம்.பி., ஹிபியின் வீடு, மழை நீரில் மூழ்கியது.


இந்நிலையில், அவரது மனைவி லிண்டா, சமூகவலைதளமான 'பேஸ்புக்'கில், பதிவு ஒன்றை, நேற்று முன்தினம் வெளியிட்டார்.அதில், 'விதி என்பது, பாலியல் பலாத்காரத்தை போன்றது. உங்களால் அதை எதிர்த்து போராட முடியவில்லை எனில், அதை அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள்' என குறிப்பிட்டார். அந்த பதிவின் கீழ், அவரது குழந்தை, மழை நீரில் இருந்து காப்பாற்றப்படும் காணொளியும், அவரது கணவரும், எம்.பி.,யுமான ஹிபி ஈடன், உணவை ரசித்து உண்ணும் காணொளியையும் பதிவிட்டு இருந்தார்.






இந்த பதிவு, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லிண்டாவின் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, நேற்று அந்த பதிவை நீக்கிய லிண்டா, 'தன் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், பெண்களை இழிவுபடுத்துவது தன் நோக்கம் அல்ல' எனவும் தெரிவித்து, தன்செயலுக்கு மன்னிப்பு கோரினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
23-அக்-201916:11:17 IST Report Abuse
Subburamu Krishnaswamy She might have had such experience in her personal life. Ok That is her philosophy. No brainy people will compare rape with other events of crisis.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
23-அக்-201913:29:26 IST Report Abuse
Sridhar கேரளான்னாலே கொஞ்சம் கிளுகிளுப்பு தான்
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
23-அக்-201911:46:05 IST Report Abuse
pattikkaattaan இந்த கருத்து இந்தம்மாவின் சொந்த கருத்தாக தெரியவில்லை.. ஏனென்றால் இதற்க்கு முன்பு மருத்துவரீதியாக இந்த கருத்தை சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.. என்ன இருந்தாலும் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X