போலி சான்றிதழ் விவகாரத்தில் கிடுக்கிப்பிடி: கலெக்டர் அதிரடி உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 அக்
2019
17:10
பதிவு செய்த நாள்
அக் 23,2019 00:18

சிறிய மாநிலமான புதுச்சேரியில் அதிக அளவில் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில் புதுச்சேரி மாணவர்களுக்கும், அகில இந்திய மாணவர்களுக்கும் சீட்டுகள் ஒதுக்கப்படுகின்றன. புதுச்சேரி மாநில மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிற மாநில மாணவர்கள் ஆண்டுதோறும் போலியாக சான்றிதழ் கொடுத்து சீட்டுகளை கபளீகரம் செய்து வந்தனர். குறிப்பாக இரட்டை குடியுரிமை பெற்ற மாணவர்களால் மண்ணின் மைந்தர்களின் சீட்டுகள் பறிபோனது.


இதனையடுத்து குடியுரிமை விவகாரத்தில் புதுச்சேரி அரசு, வருவாய் துறை மூலம் திருத்தங்களை செய்தது. அதன்படி, புதுச்சேரி இட ஒதுக்கீட்டு சீட்டுகளை பெற, மாணவர் அல்லது பெற்றோர் ஐந்தாண்டு புதுச்சேரி பிராந்தியத்தில் வசித்திருக்க வேண்டும். மத்திய அரசு ஊழியராக இருந்தால் புதுச்சேரி சீட் பெற மூன்று ஆண்டு பணி புரிந்து இருக்க வேண்டும்.இதனையும் மீறி, சிலர் குறுக்கு வழியில் புகுந்து புதுச்சேரி மாணவர்களின் சீட்டுகளை அபகரித்து செல்வதை தடுக்க முடியவில்லை.


இந்தாண்டு ஜிப்மரில் தமிழக மாணவி இரட்டை குடியுரிமை பெற்றது பகிரங்கமாக தெரிந்தும் கூட நடவடிக்கை எடுப்பதில் வீணான காலதாமதம் ஏற்பட்டது. இது பெற்றோர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், போலி சான்றிதழ் விவகாரம் தெரிய வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க புதுச்சேரி வருவாய் துறை செயலரும்மாவட்ட கலெக்டருமான அருண் புது உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


இதன்படி இனி சென்டாக், ஜிப்மர் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் போலி சான்றிதழ் கொடுத்தது தெரிய வந்தால் அதனை அந்தந்த சப் கலெக்டர் அல்லது டெப்டி கலெக்டரே உண்மையானதா என அறிய தாசில்தார் அல்லது துணை தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பிக்கலாம். குடியுரிமை சம்பந்தமாக புகார்கள் வரும்பட்சத்தில், போலி என கண்டறியப்பட்டால்சப் கலெக்டர் அல்லது டெப்டி கலெக்டரே அந்த சான்றிதழை நீக்கிவிடலாம்.


அத்துடன் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீதுகுற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு பரிந்துரைக்கலாம். இந்த விசாரணை முடிந்து சான்றிதழ் நீக்கம் செய்யப்பட்ட பிறகு,ஏழு நாட்களுக்குள் கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.வருவாய் செயலர் என்ற முறையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X