| உலக சாதனை நிகழ்த்தி ஜான்டூயி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி சாதனை Dinamalar
உலக சாதனை நிகழ்த்தி ஜான்டூயி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி சாதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
00:57

விழுப்புரம்:விழுப்புரம் ஜான்டூயி இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 8ம் வகுப்பு மாணவியின் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.


விழுப்புரம் அருகே பனங்குப்பத்தில் உள்ள ஜான்டூயி இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 8ம் வகுப்பு மாணவி ஸ்ரீ சாரதாதேவி. இவர், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பள்ளியில், தொடர்ந்து 5 மணி நேரம் வீணை வாசித்து, உலக சாதனை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியை, முன்னாள் சார்பு நீதிபதி செல்வராஜ் துவக்கி வைத்தார். முதல்வர் எமர்சன்ராபின், பள்ளி நிர்வாகிகள் சுகன்யாராபின், டாக்டர் வேலன்டீனா லெஸ்லி, கீதா கோபால் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இதையொட்டி, மாணவி ஸ்ரீ சாரதாதேவி, 'வொண்டர் புக் ஆப் ரெக்கார்டு' உலக சாதனையை பதிவு செய்துள்ளார். இவரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.அதே போல், பள்ளி தாளாளர் வீரதாஸ், ரோட்டரி நிர்வாகிகள் பாலகுருநாதன், ஸ்ரீராம், பிரியா ஸ்ரீராம் ஆகியோர் மாணவிக்கு நினைவு வழங்கினர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X