போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
01:13

லாரி மோதி ஒருவர் பலி



கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த, ஊரப்பாக்கம் யமுனை நகரைச் சேர்ந்த பாளையம் மகன் சபரிநாதன், 45. நேற்று முன்தினம், 'யமஹா' இருசக்கர வாகனத்தில், கிளாம்பாக்கம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில், சபரிநாதன் படுகாயமடைந்து இறந்தார். கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.10 சவரன் நகை திருட்டுகூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி வள்ளலார் நகரைச் சேர்ந்த பிரகாஷ், 35, வீட்டை பூட்டி, குடும்பத்துடன், 17ம் தேதி சென்னை சென்றார்.நேற்று முன்தினம், அவர் வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 5 சவரன் நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது.அதேபோல், சிங்கபெருமாள் கோவில் அடுத்த, செங்குன்றத்தைச் சேர்ந்த வேலு, 34, குடும்பத்துடன் வெளியூர் சென்றார். நேற்று முன்தினம், இவர் வீட்டில், மர்ம நபர்கள் புகுந்து, பீரோவில் இருந்த, 5 சவரன் நகைகளை திருடியுள்ளனர்.





'மாஜி' மின் வாரிய ஊழியர் இறப்பு



திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், கானகோவில்பேட்டையைச் சேர்ந்தவர் வேதாசலம், 64; ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர். இவர் தன், 'யமஹா' இருசக்கர வாகனத்தில், செங்கல்பட்டு அடுத்த, புல்லேரி மேடு, வனத்துறை மூலிகை பண்ணை அருகில் சென்றபோது, நிலை தடுமாறி விழுந்தார்.இதில், படுகாயமடைந்த அவரை, அருகிலிருந்தோர் மீட்டு, '108' ஆம்புலன்ஸ் மூலம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, வேதாசலம் இறந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.




மின் கசிவால் வீட்டு பொருட்கள் நாசம்



மறைமலை நகர்: மறைமலை நகர், கருநீலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 60. இவர், அரசு தொகுப்பு வீட்டில் வசிக்கிறார்.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் மின் இணைப்பு கம்பியில், திடீரென மின் கசிவு ஏற்பட்டதில், துணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகின; இதன் மதிப்பு, 1 லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.




விபத்தில் கல்லுாரி மாணவர் உயிரிழப்பு



ஸ்ரீபெரும்புதுார்: திருச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ், 20. இவர், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பீமன்தாங்கல் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, பென்னலுார் பொறியியல் கல்லுாரியில், டிப்ளமா படித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூர் சென்றபோது, விபத்தில் சிக்கி பலியானார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.





குடும்ப சண்டை: மனைவி தற்கொலை



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரவிகுமார் அவரது மனைவி காளிராஜேஸ்வரி, 26. இருவருக்கும் இடையே, அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில், காளி ராஜேஸ்வரி துாக்கிட்டு கொண்டார். இதை பார்த்த ரவிகுமார், அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின், செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இறந்தார்.




'தில்லு முல்லு' டாக்டர் கைது



பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த, திருமலைராஜுபேட்டையைச் சேர்ந்தவர் பூபாலன், 45. இவர், பள்ளிப்பட்டில் மருத்துவமனை நடத்தி வந்தார்.ஓமியோபதி மருத்துவரான இவர், ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக புகார் இருந்து வந்தது.இந்நிலையில், பூந்தமல்லி தலைமை மருத்துவர் தயாசாந்தி, நேற்று, இவரது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அலோபதி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.தயாசாந்தியின் புகாரின்படி, பள்ளிப்பட்டு போலீசார், பூபாலனை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X