நிரம்பிய பழநி வரதமா நதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
01:31

பழநி : கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் பழநி வரதமாநதிஅணை நிரம்பியுள்ளது. பாசனத்திற்காக வினாடிக்கு 100கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.


சில நாட்களாக கொடைக்கானல், பழநி பகுதியில் மழைபெய்து வருவதால், பழநியில் உள்ள மூன்று அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக வரதமாநதி அணைக்கு வினாடிக்கு 108 கனஅடி நீர்வரத்துள்ளது. குடிநீருக்காக 2 கனஅடி வெளியேற்றப்பட்டது. நேற்று நீர்மட்டம் 66 அடியாக (மொத்தம்- 66.50 அடி) அணை நிரம்பி உள்ளது. இதனையடுத்து பழநி சப் கலெக்டர் உமா அணையை பார்வையிட்டு உபரிநீர் வெளியேற்றம் குறித்தும், வெள்ள அபாய முன்னேற்பாடு குறித்தும் ஆய்வு செய்தார்.




பொறியாளர் கண்ணன் உடனிருந்தார். விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் ஆயக்குடி குளங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.


நேற்றைய நிலவரம்




பாலாறு- - பொருந்தலாறு அணைக்கு வினாடிக்கு 611 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது, 5 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 46 அடி (மொத்தம் 65 அடி). குதிரையாறு அணைக்கு வினாடிக்கு 57 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது, வெளியேற்றம் இல்லை, நீர்மட்டம் 49.85அடி (மொத்தம் 80அடி) உள்ளது.



கொடைக்கானல்: கொடைக்கானலின் குடிநீர் ஆதாரமான மனோரத்தினம் அணை தொடர் மழையால் மறுகால் பாய்ந்தது. தென் மேற்கு, வடகிழக்கு பருவமழை நன்கு பெய்த நிலையில் அணையின் முழு கொள்ளவான 21 அடி உயரத்தை எட்டியது. இதையடுத்து நகராட்சி கமிஷனர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் அணையில் மலர் துாவி வழிபாடு செய்தனர். அவர்கள் கூறுகையில், ''ஆண்டுக்கு தேவையான குடிநீர், தற்போதைய பருவமழை துவக்கத்தில் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் பாம்பாற்றில் செல்வதால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'' என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X