| பள்ளி வளாகத்தில் நீச்சல் குளம்மாணவ, மாணவியர் அவதி Dinamalar
பள்ளி வளாகத்தில் நீச்சல் குளம்மாணவ, மாணவியர் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
01:51

பல்லடம்:சேகாம்பாளையம் அரசு பள்ளி வளாகத்தில் உருவாகியுள்ள நீச்சல் குளத்தால், மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகி வருவதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, சேகாம்பாளையத்தில், அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. அதில், அருள்புரம், சேடபாளையம், சேகாம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் இருந்து, ஐநுாறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். சமீபத்தில் பெய்த மழை காரணமாக, பள்ளி வளாகத்தை தண்ணீர் சூழ்ந்து, நீச்சல் குளம் உருவாகி உள்ளது.பெற்றோர் கூறியதாவது:தரை மட்டத்தில் இருந்து, பள்ளி வளாகம் மிகவும் தாழ்வாக இருப்பதால், மழை காலங்களில் பள்ளி வளாகத்துக்குள் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், தண்ணீரில் வடியாமல் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன.தேங்கி நிற்கும் மழைநீரால், மாணவ, மாணவியர் தாண்டி செல்லும்போது, வழுக்கி விழுந்து காயமடையவும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாணவ, மாணவியரின் நலன் கருதி, தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். மழைநீர் தேங்காத வகையில், வடிகால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X