| 'ஜாப் ஒர்க்' கட்டணம் வசூலிக்க கமிட்டி: தாமதம் தவிர்க்க சிறப்பு ஏற்பாடு Dinamalar
'ஜாப் ஒர்க்' கட்டணம் வசூலிக்க கமிட்டி: தாமதம் தவிர்க்க சிறப்பு ஏற்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
01:52

திருப்பூர்:'ஜாப் ஒர்க்' கட்டணத்தை விரைந்து பெற்றுத்தர வசதியாக, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கத்தில், வசூல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் சுற்றுப்பகுதியில், 500க்கும் அதிகமான சாய ஆலைகளும், அவற்றின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும், பொது மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளன. ஏற்றுமதி மற்றும், உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கான, பனியன் துணிகளுக்கு, 'ஜாப் ஒர்க்' அடிப்படையில் சாயமேற்றி வழங்குகின்றன.சில ஆண்டுகளாக, சாய ஆலைகளுக்கான, 'ஜாப் ஒர்க்' கட்டணம் விரைவாக வழங்கப்படுவதில்லை, என்ற புகார் இருந்து வருகிறது. ஒவ்வொரு சாய ஆலையும், தனது வாடிக்கையாளரிடம் கட்டண தொகையை வசூலிக்க முடியாமல் திண்டாடி வந்தன. இந்நிலையில், 'ஜாப் ஒர்க்' கட்டணம் வசூலிக்க, சாய ஆலை உரிமையாளர் சங்க பொது செயலாளர் முருகசாமி தலைமையில், 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, முருகசாமி கூறியதாவது: சாய ஆலைகள், சாயம் மற்றும் கெமிக்கல் பொருட்களை, உடனுக்குடன் பணம் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. ஆனால், 'ஜாப் ஒர்க்'கட்டண தொகை வந்துசேர, 60 நாட்களுக்கு மேலாகிறது. இப்பிரச்னையை சமாளிக்க, வசூல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.வரும் நாட்களில், சாயமேற்றி, ஒரு மாதத்திற்கு மேலானால், வசூல் கமிட்டி மூலமாக, பேச்சு நடத்தி, 'ஜாப் ஒர்க்' கட்டணம் வசூலித்து வழங்கப்படும். அதன் பிறகும், சுமூக முடிவு எட்டப்படாவிட்டால், 'ஆர்பிட்ரேஷன்' கவுன்சிலில் புகார் செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X