| போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் Dinamalar
போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
02:07

திருப்பூர் கே.வி.ஆர்., நகரில் உள்ள நகை அடகு கடை பூட்டி கிடப்பதாகவும், நகைகளை மீட்டு தர வலியுறுத்தி அடகு வைத்தவர்கள், ஞாயிறன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், தாசில்தார் முன்னிலையில் கடை திறக்கப்பட்டு, அடகு வைத்தவர்களுக்கு நகை திரும்ப ஒப்படைக்கப்பட்டது.அப்போது, மக்கள் கூட்டத்தை சீரமைத்து கொண்டிருந்த ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட குழு தலைவர் ஞானசேகர் மீது சென்ட்ரல் போலீசார் தாக்குதல் நடத்தியதாக, அதன் நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, குமரன் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மா.கம்யூ., மற்றும் வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X