வந்தாச்சு பசுமை பட்டாசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
02:18

தீபாவளி பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படும், சில ரசாயன பொருட்களால் காற்று மாசுபட்டது; ஒலி மாசும் ஏற்பட்டது. இவற்றோடு தரமற்ற, மலிவான சீன பட்டாசுகளால், தெருவெங்கும் அதிக குப்பை நிறைந்தது.இவற்றையெல்லாம் ஆராய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. உச்சநீதிமன்றமும் பட்டாசுகளுக்கு புதிய தர நிர்ணய விதிமுறைகளை வகுத்தது. இதனால், பட்டாசு தயாரிப்பில் சில மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன.வந்தது பசுமை பட்டாசு!இவ்வகை பட்டாசில், மனிதனுக்கு கேடு விளைவிக்கும் பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயனங்களின் அளவு, 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஒலியின் அளவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அனுமதிக்கப்பட்ட, 160 டெசிபல் ஒலி அளவு, 125 டெசிபல் ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாசுபடுத்தும் புகையும் குறைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கும் மாசுபடுத்தாத இந்த பட்டாசுகளே பசுமை பட்டாசுகள்.விலையிலும் மாற்றம்சென்ற ஆண்டு வரை, பட்டாசுகளின் விலை ரூ.2000 என அச்சிடப்பட்டிருந்தால், அது ரூ.1000, ரூ.700 என விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு சரியான விலையை அச்சிட வேண்டும் என, பரிந்துரை செய்யப்பட்டிருப்பதால், விலை அச்சிடுவதிலும் மாறுதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதிக மாசு ஏற்படுத்தும் சீனப்பட்டாசுகளின் இறக்குமதிக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இந்தியாவில் மட்டுமே தயாரித்த பட்டாசு என்பதை உறுதிப்படுத்த, 'மேக் இன் இண்டியா' என்ற பெயரில் லேபிள்கள் ஒட்டப்பட்டுள்ளன.சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, மரம் வளர்ப்பதையும், குப்பையை முறையாக கையாளவும் படங்கள் வாயிலாக லேபிள்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.ேஹப்பி பசுமை தீபாவளி!பசுமை பட்டாசுகளை இந்த முறை பல்வேறு தயாரிப்பாளர்கள் அறிமுகம் செய்துள்ளனர். பிற பட்டாசுகளை காற்றிலும், அதிக மாசுபடுத்தாத இந்த பட்டாசுகளில் பல, குழந்தைகளின் பாதுகாப்புக்கு உகந்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. வழக்கமான வெடிகளை விட, பல புதுமையான வெடிகள், பாதுகாப்பானவையாகவும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியும் வந்துள்ளன.-வித்யாசாகர்பசுமை பட்டாசு விற்பனையாளர் ஆங்க்ரி பேர்டு பட்டாசு!இந்த ஆண்டு குழந்தைகளை கவரும் விதமாக, பல்வேறு வகையான பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளை கவரும் வகையில் டோரா, நெமோ, டயரி மில்க் சாக்லேட், மேஜிக் பட்டர் விலை, சோட்டா பீம், பப்பி ஷவர், ஆங்க்ரி பேர்டு போன்ற பெயர்களில், சற்று புதுமையான முறையில் தயாரித்துள்ளனர். 12 முதல் 240 ஷாட் வரையிலான பூவாண வெடிகளும் வந்துள்ளன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X