ராஜபாளையம் : ராஜபாளையம் தளவாய்புரம் மேலக்குனனக்குடி அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நேற்று காலை இளைஞர் ஒருவர் உடல் கிடந்தது . ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில் குற்றாலம் சேர்வைக்காரன் புதுாரை சேர்ந்த செண்பகராஜ் 30, என்பது தெரிந்தது. இவர் மதுரை- - செங்கோட்டை ரயிலில் செல்லும் போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.