நெருக்கடி, சகதி ரோட்டில் தத்தளிக்கும் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
02:52

ஸ்ரீவில்லிபுத்துார் : சாரல் மழைக்கே சகதி, ரோட்டில் செல்லும் கழிவுநீரால்சுகாதாரக்கேடு, கொசுத்தொல்லை, சுகாதாரவளாகம் இல்லாததால் திறந்தவெளி ,போக்குவரத்து நெருக்கடி என பல்வேறு பிரச்னைகளில் பிடியில் கிருஷ்ணன் கோவில் பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.



மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இங்கு நாளுக்கு நாள் குடியிருப்புகளும், வெளியூர் பயணிகளும் அதிகரித்துவரும் நிலையில் இங்கு போதியஅடிப்படை வசதிகள் இல்லாதநிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. பொது சுகாதார வளாகம் இல்லாததால் பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இடமில்லாமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர்.



சாரல் மழை பெய்தாலேபயணியர் நிழற்குடைமுன்பு சகதி ஏற்பட்டு அதன் மீதுதான் பயணிகள் நடந்து சென்று பஸ் ஏற வேண்டியதுள்ளது. வேகமாக வரும் பஸ்கள் பயணிகள் மீது சகதி அபிஷேகம் செய்கின்றன.வத்திராயிருப்பு ரோட்டின் இருபுறமும் முறையான கழிவுநீர் வாய்க்கால்கள் இல்லாமல் ரோட்டில் கழிவுகள் செல்வதால் சுகாதாரகேடும், துர்நாற்றமும் ஏற்பட்டு வருகிறது.



குப்பாம்பட்டி ரோடு திரும்பும் இடத்தில் உள்ள நீர்வரத்து ஓடையில் வணிக நிறுவனங்களின் கழிவுகள்கொட்டப்பட்டு அடைப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் ரோடு குறுகலாக இருப்பதால் பஸ்கள் திரும்பமுடியாதநிலை உள்ளது. குறுகியதாக உள்ள குன்னுார் ரோட்டில் எளிதில் வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை உள்ளது. வத்திராயிருப்பு செல்லும் ரோட்டில் டூவீலர்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.



ரோட்டின் கீழ்புறம் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் இங்குள்ள ஆக்கிரமிப்புகளை முழு அளவில் அகற்றி அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ்ஸ்டாண்ட் கட்டப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X