போலீஸ் டைரி...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
04:35

போலி நகை வைத்து மோசடி


செம்மஞ்சேரி: சோழிங்கநல்லுாரில் உள்ள தனியார் வங்கியில், 2017ல், திருக்கோவிலுாரைச் சேர்ந்த ரவி, 35, என்பவர், 122 கிராம் நகை வைத்து, 2.25 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்கு, சோழிங்கநல்லுாரில் வசிப்பதாக, ஒரு போலி முகவரி ஆவணத்தை கொடுத்துள்ளார். கடனை திருப்பி செலுத்தாததால், நகையை ஏலத்தில் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, நகையை சோதனை செய்தபோது, அவை போலி நகை என, தெரிந்தது. வங்கி மேலாளர் அன்பழகன், நேற்று, செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, ரவியை தேடி வருவதுடன், வங்கி ஊழியர்களிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.



பக்கத்து வீட்டில் புகுந்த போதை ஆசாமி



எம்.ஜி.ஆர்.நகர்: அசோக் நகர், அம்பேத்கர் குடிசை பகுதியைச் சேர்ந்தவர், கைலாசம், 40; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லலிதா, 35. நேற்று முன்தினம் இரவு, கைலாசம் ஆட்டோ ஓட்ட சென்றார். நள்ளிரவு அவரது வீட்டில், மர்ம நபர் புகுந்துள்ளார். இதை கண்ட லலிதா கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர், மர்ம நபரை பிடித்து நையப்புடைத்து, எம்.ஜி.ஆர்.நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 20, என்பதும் கஞ்சா போதையில் இருந்ததும் தெரிந்தது. பிரகாஷ் மீது கற்பழிப்பு வழக்குகள் உள்ளன.




செயின் பறித்த இருவர் கைது



நங்கநல்லுார்: நங்கநல்லுார் பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம், செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, தனிப்படை அமைத்து, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் சின்னமலையைச் சேர்ந்த சந்தோஷ், 26; அபிஷேக், 22, என்பதும், செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 8 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.




இரு பெண்களிடம் செயின் பறிப்பு



நொளம்பூர்: முகப்பேர், ஒன்றாவது பிளாக்கைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி, 60. இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்றார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பரமேஸ்வரியை தாக்கி, அவரது, 6 சவரன் செயினை பறித்து தப்பினர். நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



l திருமுல்லைவாயல்: சோழம்பேடு பகுதியைச் சேர்ந்தவர், கலாதேவி, 54. இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் முகவரி கேட்பது போல், 6 சவரன் செயினை பறித்து தப்பினார். திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.




ஏ.டி.எம்., உடைக்க முயன்றவர் கைது



பம்மல்: பம்மலை அடுத்த பொழிச்சலுார் சாலையில், தனியார் வங்கி, ஏ.டி.எம்., உள்ளது. நேற்று முன்தினம் இரவு, போதையில் சென்ற வாலிபர் ஒருவர், ஏ.டி.எம்., மிஷினை உடைத்து, திருட முயன்றார். தகவலறிந்த சங்கர் நகர் போலீசார், அவரை பிடித்து விசாரித்ததில், உளுந்துார்பேட்டை, சிறுவத்துாரைச் சேர்ந்த அருள்மணி, 25, என்பது தெரிந்தது. இதையடுத்து, அருள்மணியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.




மாணவனிடம் பாலியல் அத்துமீறல்



பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே, பள்ளி மாணவனிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை, பொதுமக்கள் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், குன்றத்துார், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நித்திராஜ், 42, என்பது தெரிந்தது. சில ஆண்டுகளுக்கு முன், கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நித்திராஜ், ஒரு மாதத்திற்கு முன் வெளியே வந்தார். நேற்று முன்தினம், மதுரவாயலில் இருந்து, பூந்தமல்லிக்கு ஷேர் ஆட்டோவில் சென்றபோது, மாணவனை கடத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, நித்திராஜ், 'போக்சோ' சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டார்.




பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை



வடபழநி: வளசரவாக்கம், லட்சுமி நகரைச் சேர்ந்தவர், ராஜேஷ், 32. இவரது மனைவி மணிமேகலை, 28. குடிப் பழக்கமுடைய ராஜேஷ், தினமும் மணிமேகலையிடம், வரதட்சணை கேட்டு, அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து, வடபழநி மகளிர் காவல் நிலையத்தில், மணிமேகலை புகார் அளித்தார். விசாரணையில், ராஜேஷ் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.




கஞ்சா விற்ற இருவருக்கு, 'காப்பு!'



மெரினா: மெரினா போலீசார், நேற்று முன்தினம் இரவு, கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாலிபர்கள் இருவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. விசாரணையில், மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்த பிரவீன், 27, பிரசாந்த், 26, என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.





வழிப்பறி திருடர்கள் அகப்பட்டனர்



ஆர்.கே.நகர்: கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர், கார்த்திக், 29; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, தன் வீட்டருகே நடந்து சென்றபோது, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன் மற்றும் 1,000 ரூபாயை, மர்ம நபர்கள் பறித்து தப்பினர். விசாரித்த, ஆர்.கே.நகர் போலீசார், நேற்று கொருக்குப்பேட்டை, பாரதி நகரைச் சேர்ந்த சுரேஷ் என்கிற அரிகிருஷ்ணன், 28, உள்ளிட்ட மூவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.




தலைமறைவு குற்றவாளிகள் சிக்கினர்



வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகர், பென்சில் பேக்டரி, ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர், துரைபாபு, 21; மூலக்கொத்தளம், கொல்லாபுரி நகரைச் சேர்ந்தவர் ஆனந்த்ராஜ், 21. இவர்கள் மீது, வழிப்பறி, பிக் பாக்கெட், திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ஒரு வழக்கில் ஆஜராகாமல் இருந்த இருவரையும், நேற்று வண்ணாரப்பேட்டை போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X