மழைநீர் சேகரிப்பில் அசத்தும் பொறியாளர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 அக்
2019
20:23
பதிவு செய்த நாள்
அக் 23,2019 05:21

சிட்லபாக்கம் : சென்னையில், கடந்த சில நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால், மழைநீரை சேமிக்க தகுந்த கட்டமைப்புகள் இல்லாததால், தண்ணீர் வீணாகிறது.



பெருகி வரும், மக்கள் தொகைக்கு ஏற்ப, தண்ணீரின் தேவையை உணர்ந்து, அனைத்து கட்டடங்களிலும், மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என, அரசு விழிப்புணர்வு செய்து வருகிறது.இந்நிலையில், 2,250 ரூபாயில், தன் வீட்டின் மாடியில் பொழியும் மழைநீரை, ஒரு சொட்டு கூட வீணாக்காமல் சேமித்து வருகிறார், தனியார் கட்டுமான நிறுவன பொறியாளர்.



இலக்கு




சென்னை, குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கம், கார்த்திக் அவென்யூவைச் சேர்ந்தவர் தயானந்த் கிருஷ்ணன், 46; கட்டட பொறியாளர்.இவர், நண்பர்களுடன் சேர்ந்து, சொந்த மாக கட்டுமான நிறுவனம் வைத்துள்ளார். '100 சதவீதம் மழைநீரையும் சேமிக்க வேண்டும்' எனும் தன் இலக்கை அடைய, வீட்டிலேயே அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளார்.



இது குறித்து நம்மிடம் அவர் பேசியதாவது: சிட்லபாக்கத்தில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேல், குடிநீர் வினியோகம் சீராக இல்லை. பெரும்பாலான வீடுகளில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை உறிஞ்சி, சுத்திகரிப்பு இயந்திரம் வாயிலாக, அந்த தண்ணீரை சுத்தம் செய்து, குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.அதிலும், இந்தாண்டு கோடையில் நிலத்தடி நீர் வறண்டு, அதலபாதாளத்திற்கு சென்றதால், நிலைமைபடுமோசமானது.



இதையடுத்து, என் குடும்பத்தின்தண்ணீர் தேவையை, நானே பூர்த்தி செய்ய, மழைநீரை முழுவதுமாக சேமிக்க முடிவு செய்தேன்.அதன்படி, ஜூலை மாத இறுதியில் பெய்த மழையின்போது, என் வீட்டு மாடியில் தேங்கிய மழைநீரை, குழாய்கள் வழியாக தரைக்கு கொண்டு வந்து, 'நைலான்' வலை வைத்து, சுத்தம் செய்து, அவற்றை, பேரல்களில் சேமித்தேன். முதலில், 200 லிட்டர் கொள்ளளவு உள்ள, இரண்டு பேரல்களில் மட்டுமே சேமித்த நிலையில், மழை சற்று தீவிரமாக பெய்தது. இதையடுத்து, பேரலை தவிர்த்து, வீட்டில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியிலும் சேமிக்க முடிவு செய்தேன்.தொடர்ந்து, மாடியில் இருந்து தரைத்தளத்திற்கு வரும் குழாய்களை, ரப்பர் குழாய் மூலம், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இணைத்து, அங்கும், 'நைலான்' வலை வைத்து, தண்ணீரை சுத்தம் செய்துசேமித்தேன்.



இதற்கு எனக்கு, 2,250 ரூபாய் மட்டுமே செலவானது. இதனால், ஒரு சொட்டு மழைநீரை கூட வீணாக்காமல், 18 ஆயிரம் லிட்டர் நீரை, என்னால் சேமிக்க முடிந்தது.சேமிப்புபொதுவாக, 1,000 சதுர அடி பரப்பு உள்ள ஒரு வீட்டின் மாடியில், 10 மி.மீ., அளவு மழை பெய்தால், அதில் இருந்து, 800 லிட்டர் நீரை சேமிக்கலாம்.சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மட்டும், ஆண்டிற்கு, 1,400 மி.மீ., மழை பொழிகிறது. அந்த வகையில், 1.12 லட்சம் லிட்டர் நீரை சேமிக்கலாம்.இதில் சராசரியாக, மூன்று பேருள்ள குடும்பத்திற்கு, குடிப்பதை தவிர, மற்ற தேவைகளுக்கு ஆண்டிற்கு, 1.09 லட்சம் லிட்டர் தண்ணீரே தேவைப்படுகிறது.



இந்த தண்ணீரை, மழைநீரை சேமிப்பதை வைத்தே, நாம் பெற்றுக் கொள்ளலாம். முடிந்தவரை, புதிதாக வீடு கட்டும் ஒவ்வொருவரும், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, மழைநீரை சேமிக்க வேண்டும். அவ்வாறு, இல்லாதவர்கள் பழைய முறைப்படி, மழைநீரை பூமிக்குள் செலுத்தியாவது சேமிக்க வேண்டும்.ஆலோசனைஇதை தவிர்த்து, நிலத்தடி நீரை உறிஞ்சுவது என்பது, எந்த விதத்திலும் நமக்கு நன்மை அளிக்காது. அது, இயற்கையை நாம் தெரிந்தே அழிப்பதற்கு சமமாகும்.இவ்வாறு அவர் பேசினார்.



தற்போது, தயானந்த் கிருஷ்ணனை போலவே, அவரதுவீட்டின் அருகில், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி வைத்திருக்கும், 15க்கும் மேற்பட்டோர், தங்கள் வீடுகளிலும் மழைநீர் சேமிப்பை ஏற்படுத்தி உள்ளனர்.மேலும், பலர் கட்டமைப்பை ஏற்படுத்த, இவரிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர்.அவரிடம் ஆலோசனை பெற விரும்புவோர்: 97908 19813 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
26-அக்-201911:49:34 IST Report Abuse
karutthu இதை ஊக்குவித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X