மழை நீரில் மூழ்கிய சர்வீஸ் சாலை: மண் மூடிய பாலம்: தவிக்கும் பொதுமக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
08:11

பனமரத்துப்பட்டி: சர்வீஸ் சாலை, தண்ணீரில் மூழ்கி கிடப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தண்ணீரை வெளியேற்ற வலியுறுத்தி, சாலையில் பரிசல் ஓட்டியும், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் மக்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.


சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில், சீலநாயக்கன்பட்டி முதல் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வரை சர்வீஸ் உள்ளது. அதில், கிழக்கு பகுதியிலுள்ள சர்வீஸ் சாலையை, தலைமலை கரடு அடிவாரம், நிலவாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர். தலைமலை கரட்டிலிருந்து பாய்ந்து வரும் மழை நீர், வீடுகளிலிருந்து வெளிவரும் கழிவு நீர், சர்வீஸ் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக செல்லும், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ, சிறிய ரக கார்கள் தண்ணீரில் மூழ்கி, இன்ஜின் பழுதடைவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், சர்வீஸ் சாலை தண்ணீரில் மூழ்கியது. அப்பகுதி இளைஞர்கள், சாலையில் தேங்கிய மழை நீரில், பரிசல் ஓட்டி எதிர்ப்பை வெளிக்காட்டினர். நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்னதானப்பட்டி போலீசார், மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், மக்கள் கலைந்து சென்றனர்.


இது குறித்து, நிலவாரப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, தலைமலை அடிவாரம் பகுதி மக்கள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை சார்பில், சாலையில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற, சிறிய அளவில் கால்வாய் கட்டியுள்ளனர். ஆனால், தலைமலை கரட்டிலிருந்து வரும் மழை நீர் செல்வதற்கு, தேவையான அளவு பாதை அமைக்கவில்லை. நெடுஞ்சாலையின் அடியில், 10 அடி ஆழம், 20 அடி நீளம் கொண்ட பாலம் உள்ளது. அந்த பாலம் மண்மூடி கிடப்பதால், சர்வீஸ் சாலையில் மழை நீர் தேங்குகிறது. கழிவு நீர் செல்லும் பாதையை சீரமைப்பதில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் இடையில், பனிப்போர் நிலவி வருகிறது. சாலையை பயன்படுத்த, சுங்க கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம், தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X