வீரபாண்டி: மளிகை கடையின் பூட்டை உடைத்த, டிரைவரை போலீசார் கைது செய்தனர். சேலம், சீரகாபாடியை சேர்ந்த மோகன், 40, அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, ஆட்டையாம்பட்டி போலீசார் ரோந்து பணியில் அவ்வழியாக செல்லும் போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, ஒருவர் கல்லாப்பெட்டியை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பெரிய சீரகாபாடி ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த சங்கர், 42, என்பதும், சரக்கு வாகன டிரைவர் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.