| லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு; திருநங்கைகள் உட்பட நால்வர் கைது Dinamalar
லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு; திருநங்கைகள் உட்பட நால்வர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
08:11

சேலம்: நாமக்கல் மாவட்டம், தத்தாதிரிபுரம் அருகே, குருவங்காட்டை சேர்ந்த லாரி டிரைவர் சுப்ரமணி, 52; இவர், ராசிபுரத்திலிருந்து பழைய பேப்பர்களை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்றார். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, உடையாப்பட்டி பிரிவு அருகே, நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணியளவில், லாரியை நிறுத்தி விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஆட்டோவில் வந்த, மூன்று திருநங்கைகள் அவரை தாக்கி, 22 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர். அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன், மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா, சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்துக் கொண்டிருந்தார். மீண்டும் அந்த இடத்துக்கு ஆட்டோவில் திருநங்கைகள் வந்தனர். ஆட்டோவை போலீசார் மடக்கிய நிலையில், அவர்கள் தப்பினர். ஆட்டோ டிரைவர், உடையாப்பட்டியை சேர்ந்த திருமுருகன், 36, என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில், பண பறிப்பில் ஈடுபட்டது, ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த சுருதிகா, 19, தாதம்பட்டியை சேர்ந்த சஞ்சனா, 20, பொன்னம்மாபேட்டையை சேர்ந்த நைனிகா, 23, என்பது தெரிந்தது. அவர்களையும், திருமுருகனையும் கைது செய்த போலீசார், ஆட்டோவையும், 15 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X