| 'தீபாவளிக்கு கதர் ஆடை அணிய வேண்டும்' Dinamalar
'தீபாவளிக்கு கதர் ஆடை அணிய வேண்டும்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
08:13

காட்பாடி: ''தீபாவளிக்கு கதர் ஆடை அணிய வேண்டும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


வேலூர், கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், காந்தியின், 150வது பிறந்தநாளையொட்டி, சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை, வேலூர் காட்பாடியில் நேற்று மாலை நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாதயாத்திரையை துவக்கி வைத்தார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த தீபாவளியை, மது இல்லாமல் கொண்டாட வேண்டும். ஆனால், டாஸ்மாக்கில், 585 கோடி ரூபாய்க்கு மது விற்பனைக்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில், இளைஞர்கள் மது குடித்து விட்டு வீடுகளுக்கு சென்றால், அதை விட சோகம் எதுவும் இல்லை. கதர் ஆடை அணிய வேண்டும் என காந்தி கூறினார். அதைத்தான் பிரதமர் மோடியும் விரும்புகிறார். எனவே, வரும் தீபாவளிக்கு, அனைவரும் கதர் ஆடையை அணிய வேண்டும். தி.மு.க.,வின் முரசொலி அறக்கட்டளை இடம் பஞ்சமி நிலம் என்று புகார் வந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே, அதற்கான ஆதாரங்களை வைகோ கூறினார். எனவே, ஸ்டாலினிடம் இது குறித்து வைகோ தெரிவித்து, அந்த பஞ்சலி நிலம் யாருக்கு சொந்தமோ அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது, தி.மு.க.,வின் கடமை என்பதை உணர்த்த வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற சிந்தனையுடைய, நடிகர் ரஜினி, பா.ஜ.,வில் சேர வேண்டும் என, 10 ஆண்டுகளாக கூறி வருகிறேன். அவர் தனிக்கட்சி ஆரம்பித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும். காங்., கட்சிக்கு, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் இனி எதிர்காலம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் வேலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X