| கல்லறைக்கு நிலம் ஒதுக்க கலெக்டரிடம் மனு Dinamalar
கல்லறைக்கு நிலம் ஒதுக்க கலெக்டரிடம் மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
09:29

நாமக்கல்: மல்லசமுத்திரத்தை சேர்ந்த, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், நாமக்கல் கலெக்டர் மெகராஜிடம் அளித்த மனு விபரம்: மல்லசமுத்திரம் பகுதியில், 35 கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தினர் வசிக்கிறோம். கடந்த, 40 ஆண்டுகளாக, பொது மயானத்தில் இறந்தோரை கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்து வந்தோம். இந்நிலையில், 'உடல்களை எரிக்க மட்டுமே அனுமதி; புதைக்கக் கூடாது' என, பேரூராட்சி நிர்வாகத்தினர் தடுத்து விட்டனர். இதையடுத்து, திருச்செங்கோடு தாசில்தாரை சந்தித்தபோது, வேறு இடத்தில் கல்லறைக்கு நிலம் ஒதுக்கி தருவதாக அவர் கூறினார். இதுவரை நிலம் ஒதுக்கி தரவில்லை. எனவே, வையப்பமலை சாலையில் மேல்முகம் எல்லையை தாண்டிய மயானத்தில் கல்லறை அமைக்க நிலம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X