| மோகனூரில் கனமழை: 2 வீடுகள் இடிந்து சேதம் Dinamalar
மோகனூரில் கனமழை: 2 வீடுகள் இடிந்து சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
09:29

மோகனூர்: மோகனூரில் பெய்த கனமழைக்கு, இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. மோகனூர் பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 3:30 மணிக்கு, லேசாக பெய்யத்துவங்கிய மழை, கனமழையாக மாறியது. எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி, இரண்டு மணி நேரத்துக்கு மேல் அமைதியாக பெய்தது. தாழ்வான பகுதிகளில், மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மோகனூர் - ப.வேலூர் சாலை, வள்ளியம்மன் கோவில் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில், மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன. மாவட்டத்தில், அதிக அளவாக, மோகனூரில் மட்டும், 98 மி.மீ., பெய்துள்ளது. இது, மோகனூரில், இதுவரை பெய்த மழையில் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மழைக்கு தாக்குப்பிடிக்காமல், இரண்டு வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. மோகனூர் மேட்டு தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவர் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வருவாய் துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவருக்கு, நிவாரண தொகை வழங்கினர். மேலும், தோட்டக்காரத்தெருவை சேர்ந்த பழனியப்பன் என்பவர் வீடும், இடிந்தது. வருவாய் துறையினர் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X