| பைக் திருடிய வழக்கு: சிறுவனுக்கு சிறை Dinamalar
பைக் திருடிய வழக்கு: சிறுவனுக்கு சிறை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
09:30

ப.வேலூர்: ஜமீன் இளம்பள்ளியில் பைக் திருடிய வழக்கில் சிறுவனுக்கு, சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஜேடர்பாளையம் அடுத்த, ஜமீன் இளம் பள்ளியை சேர்ந்தவர் சண்முகம், 41; இவர், நடப்பு மார்ச்சில், ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கை அப்பகுதியில் உள்ள காந்தி ஆசிரமம் முன் நிறுத்திவிட்டு சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது பைக் மாயமாகியிருந்தது. ஜேடர்பாளையம் போலீசார் விசாரணையில், பைக்கை திருடியது, குமாரபாளையம், வட்டமலையை சேர்ந்த, 18 வயது சிறுவன் என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், பைக்கை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு, 10 மாத சிறை தண்டனை வழங்கி, பரமத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பழனிக்குமார் தீர்ப்பளித்தார்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X