| மூதாட்டியிடம் நகை பறிப்பு; போலீஸ் எனக்கூறி நூதனம் Dinamalar
மூதாட்டியிடம் நகை பறிப்பு; போலீஸ் எனக்கூறி நூதனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
09:31

ராசிபுரம்: ராசிபுரம், நரசிம்மன் தெருவைச் சேர்ந்தவர் சவுண்டம்மாள், 65. இவர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று மதியம், 2:00 மணிக்கு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த இரு வாலிபர்கள், 'தாங்கள் போலீஸ்' என, கூறியுள்ளனர். மேலும், அவர் கழுத்தில் இருந்த நகையை பார்த்து, 'பட்டப்பகலில் இப்படி அணிந்து சென்றால், திருடர்கள் பறித்துக் கொள்வர். அதை கொடுங்கள் காகிதத்தில் சுற்றி தருகிறோம்' என்றனர். அவரும், 7 பவுன் சங்கிலியை கழற்றி கொடுத்தார். அதை வாங்கி கொண்ட வாலிபர்கள் தங்கள் கையில் இருந்த பொட்டலத்தை கொடுத்துவிட்டு சென்று விட்டனர். வீட்டிற்கு சென்று பார்த்த போதுதான், பொட்டலத்தில் செங்கல் தூள் இருந்தது தெரிந்தது. ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விழிப்புணர்வு: ராசிபுரம், நித்யசுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கவுள்ளதால், போலீசார் முக்கிய வீதிகளில், 'திருடர்கள் ஜாக்கிரதை' என, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதில், முக்கியமாக, 'அடையாளம் தெரியாதவர்களிடம் நகையை கழற்றி கொடுக்காதீர்கள்' என, குறிப்பிட்டு எச்சரிக்கின்றனர். ஆனாலும், பட்டப்பகலில் மூதாட்டியிடம், மர்ம நபர்கள் நூதன முறையில் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X