| குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய கோரி கிராம மக்கள் மனு Dinamalar
குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய கோரி கிராம மக்கள் மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
09:39

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில், குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையை சரிசெய்ய கோரி மனு கொடுக்க, யூனியன் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டனர்.


பள்ளப்பட்டி அடுத்த, வேலம்பாடி அருகே, பொன்னாவரம் கிராமத்தில், ஒரு மாதத்திற்கும் மேலாக காவிரி குடிநீர் விநியோகம் இல்லை. அப்பகுதி பொதுமக்கள், அருகில் உள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது அந்த கிணறுகளிலும் தண்ணீர் குறைந்ததால், தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி பொது மக்கள், அரவக்குறிச்சி யூனியன் அலுவலகத்தில், பி.டி.ஓ., சுப்பிரமணியிடம், குடிநீர் பற்றாக்குறை பிரச்னை தீர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு கொடுத்தனர். இதேபோல், நாகம்பள்ளி, சாலப்பாளையம் ஆகிய கிராமங்களில், ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதாகி அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. மோட்டாரை சரிசெய்ய கோரி, அப்பகுதி மக்கள், 30க்கும் மேற்பட்டோர், பி.டி.ஓ.,விடம் மனு கொடுத்தனர்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X