குளித்தலை: குளித்தலை அண்ணா திருமண மண்டபத்தில், சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற உலக முதியோர் தினவிழாவில், சப் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான், முதியோர்களுக்கு பரிசு வழங்கினார். மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பாக்யலட்சுமி, குளித்தலை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி ஸ்ரீகாந்த் ஆகியோர்கள் முதியோர் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினர். இதில், பாட்டுப் போட்டி, நடனம் என, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.அதில் வெற்றி பெற்றவர்களுக்கு, கப் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் , மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி , மாவட்ட சமுக நல அலுவலர் ரவிபாலா ஆகியோர் பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில், ஹெட்ஸ் தொண்டு நிறுவன முதியோர் காப்பக இயக்குனர் பழனியம்மாள் உள்பட, பல தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமில், முதியோர்களுக்கு பரிசோதனை செய்து, மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. இதில், மாவட்டத்தில் உள்ள, 10 முதியோர் இல்லங்களிலிருந்து, 300க்கும் மேற்பட்ட முதியோர், ஹெட்ஸ் தொண்டு நிறுவன பணியானளர்கள். சமூக நலத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.