பருவ மழையால் 3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை: பவானியிலும் தண்ணீர் திறப்பால் காவிரியில் வெள்ள அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
13:54

மேட்டூர்: நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், இன்று அதிகாலை நடப்பாண்டு மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக உபரிநீராக வெளியேற்றப்படும். பவானி ஆற்றிலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.


மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி; நீர் கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால், நேற்று காலை வினாடிக்கு, 16 ஆயிரத்து, 239 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று இரவு வினாடிக்கு, 27 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. மேலும், பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு, 13 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரி நீர் பவானி ஆறு வழியாக காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால், மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு நேற்று முன்தினம் இரவு முதல் வினாடிக்கு, 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர் வரத்தை விட, திறப்பு வெகுவாக குறைந்ததால் நேற்று முன்தினம், 117.80 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று இரவு, 118.60 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு, 91.25 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நிரம்ப இன்னமும், 2.5 டி.எம்.சி., நீர் தேவை. இந்நிலையில், நேற்று இரவு திடீரென மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 27 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், நடப்பாண்டில் கடந்த மாதம், 7ல் முதன்முறை, 23ல் இரண்டாம் முறை நிரம்பிய அணை, இன்று அதிகாலை மூன்றாவது முறையாக முழு கொள்ளளவான, 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை நிரம்பும் பட்சத்தில், மேட்டூர் அணைக்கு வரும் நீர் மொத்தமாக உபரிநீராக திறக்கப்படும். ஏற்கனவே பவானியில், 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டால், காவிரியில் வெள்ள அபாயம் ஏற்படும். அதனால், கரையோரத்தில் வசிக்கும் மக்களை, எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X