பணியனுபவ சான்றிதழ் வழங்க மறுக்கும் நிர்வாகம்: கல்லூரிக்கல்வி இயக்குனரகம் கடும் எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
13:55

சேலம்: 'பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அனுபவ சான்றிதழ் வழங்க மறுக்கும், தனியார் பல்கலை மற்றும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்லூரிக்கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு பணி அனுபவ சான்றிதழ் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். தனியார் பல்கலை மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஏராளமானோர், அரசு பணிக்கு விண்ணப்பிக்க முயற்சிக்கின்றனர். இதில், பணி அனுபவ சான்றிதழ் வழங்காமல், பல கல்லூரிகள் இழுத்தடித்து வருவதாகவும், வசூல் வேட்டை நடத்துவதாகவும் புகார் எழுந்தது. இதனால், ஏராளமானோர் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதை தடுக்க, கல்லூரிக்கல்வி இயக்குனர் ஜோதி வெங்கடேவரன், அனைத்து தனியார் பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: பல கல்லூரிகளில், பணியனுபவ சான்றிதழ் தர மறுப்பது, உரிய படிவத்தில் வழங்க மறுப்பது, வருகை பதிவேடு நகல் மற்றும் ஊழதிய வழங்கும் பதிவேடு தர மறப்பது, குறிப்பிட்ட தொகையை கேட்டு கட்டாயப்படுத்துவது, பணியிலிருந்து விலகல் கடிதம் கேட்பது, காரணமின்றி தாமதப்படுத்துவது என பல புகார்கள் வருகின்றன. இவை அரசு வகுத்துள்ள ஒழுங்காற்று சட்ட விதிமுறைகளை மீறிய செயலாகும். எனவே பணியனுபவ சான்றிதழ் கோருபவர்களுக்கு, எந்த புகாருக்கும் இடம் தராதவாறு, தனியார் பல்கலை மற்றும் கல்லூரிகள் உடனடியாக சான்றிதழ்களை வழங்க வேண்டும். மீறும் நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X